எமது கல்லூரியின் ஸ்தாபகர் அமரர் திரு.வி.வேலுப்பிள்ளை அவர்கள் உவர்மலை வாழ்மக்களின் பிள்ளைச் செல்வங்களுடைய எதிர்காலம் உன்னதமாக அமைய வேண்டும் எனும் இலட்சிய நோக்கோடும் உயரிய சிந்தனையோடும் அடர்ந்த காடாகக் கிடந்த நிலத்தை உவர ;மலை மக்களின் பேராதாரவுடன் செப்பனிட்டு தமது அயராத முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் 70′ × 20′ கட்டிடத்தை கட்டி தென்னங் கிடுகினால் கூரையிட்டு அறிவொளியைப் புகட்டும் ஆலயமாக உவர்மலை தமிழ் வித ;தியாலயம் எனும் நாமம் சூட்டி 1978ம் வருடம் மாசி திங்கள் 10ம் திகதி 97 மாணவர்களுடனும் 04ஆசிரியர்களுடனும் திரு.ஏ.தங்கவேல் அவர்களை முதலாவது அதிபராகக் கொண்டு இன்றைய பாராளுமன்ற கௌரவ எதிர்க்கட்சித் தலைவர்.இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவர்களால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு திரு.வி.வேலுப்பிள்ளை அவர்களினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
இக்கல்லூரியின்உருவாக்கத்திற்கு கல்லூரி ஸ்தாபகர், உவர்மலைமக்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், அதிபர்.ஏ.தங்கவேல், உதவி அரசாங்கஅதிபர் ஸ்ரீ.வே.சாம்பசிவ ஐயர் போன்றோரும் இவர்ளோடு ஒன்றிணைந்து இன்னும் பல நலன்விரும்பிகளும் உழைத்த உழைப்பு காரணமாயிற்றென எமது கல்லூரியின் பல இதழ்களிலும் பதிவிலிடப்பட்டு நினைவு கூறப்படுகின்றது.