- பாடசாலை ஆரம்பத்தைக் குறிக்கும் முதல் மணி 7.15 க்கு ஒலிப்பதற்கு முன்னர் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமாயிருத்தல் வேண்டும். தாமதமாக வரும் மாணவர்கள் பாடசாலை அனுமதிக்கப்படமாட்டார்.
- மாணவர்கள் தமது சீருடை. காலணி. கழுத்துப்பட்டி என்பவற்றை அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுத்தமாகவும்.நேர்த்தியாகவும் அணிந்துவர வேண்டும்.
- பாடசாலையின் முதலாவது மணி ஒலித்ததிலிருந்து காலைப் பிரார்த்தனை ஆரம்பமாகும் வரை கண்டிப்பான அமைதி பேணப்பட வேண்டும். அதேபோல் கடைசிப் பாடத்தின் முடிவுமணி ஒலித்ததிலிருந்து நாளின்இறுதிப் பிரார்த்தனை ஆரம்பமாகும் வரையும் அமைதி பேணப்பட வேண்டும்.
- பாடசாலைக்கு சமூகம் தர இயலாமை ஏற்படின் அதற்குரிய காரணத்தைக் குறிப்பிட்டு அதிபரிடம் முன்னராகவே அனுமதி பெறுதல் வேண்டும். இவ்வனுமதியின்றித் தொடர்ந்து ஒரு மாதம் பாடசாலைக்கு சமூகம் தராத மாணவர் பெயர் இடாப்பில் இருந்து நீக்கப்படும்.
- எதிர்பாராத காரணத்தினால் மாணவர் பாடசாலைக்கு வரமுடியாமை நேருமாயின் அதுபற்றி இயன்றளவுவிரைவுடன் அதிபருக்கு அறிவித்தல் வேண்டும். திரும்பி வருகை தரும் நாளில் லீவுப் பதிவுக் கொப்பியைபூர்த்தி செய்து கொண்டு வந்து அதிபரிடம் காட்டி ஒப்பம் பெறல் வேண்டும்.
- பாடசாலை நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் எவரும் எக்காரணத்திற்காகவும் பாடசாலையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். நோய் / விபத்து இடம் பெறும் வேளைகளில் பெற்றோர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு மாணவர்கள் ஒப்படைக்கப்படுவர்.
- பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கம் போது அதிபர் அல்லது ஆசிரியர்கள் அனுமதியின்றி எவரும் வகுப்பறைகளை விட்டு வெளியே நடமாடுதல் கூடாது.
- பாடசாலையில் நடைபெறும் சகல பரீட்சைகளுக்கும் மாணவர்கள் சமுகமளிக்க வேண்டியது மிகக்கட்டாயமானதாகும். பரீட்சைகளுக்கு சமுகமளிக்காமல் விட்டால் தகுந்த காரணத்தை ஆதார பூர்வமாகசமர்ப்பித்தல் வேண்டும்.
- ஆய்வுகூடம், நூலகம். விளையாட்டு மைதானம் முதலியவற்றுக்குச் செல்லும் போதும், திரும்பி வரும் போதும் மாணவர்கள் ஒழுங்கைப் பேணுதல் வேண்டும்.
- இடைவேளையின் போது மாணவர்கள் சிற்றுண்டிச்சாலை. வகுப்பறைகள். பாடசாலை வளாகம் முதலியவற்றை அசுத்தப்படுத்தாத வகையில் ஒழுங்குடன் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
- பாடசாலை நேரங்களில் மாணவர்களைப் பார்ப்பதற்கு வெளியிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- மாணவர்களுக்குத் தெரிவிப்பதற்கென தொலைபேசி மூலமாக எந்தச் செய்தியும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.அத்துடன் தொலைபேசி மூலமாக நேரடியாக மாணவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியாது.
- பாடசாலை வளாகத்தினுள் எவ்வேளையிலாயினும் மாணவர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்கள் எதுவும் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பாடசாலை கட்டிடங்களும், தளபாடங்களும், ஏனைய பொருட்களும் தம் சொந்தப் பொருட்களைப் போல மாணவர்களால் பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டும்.