STEP = Society of Technology & Environmental Protection
STEP அமைப்பினூடாக உவர்மலை விவேகானந்தாவின் மகத்தான இயற்கைசார் சமூகப்பணி. மரங்கள் நடுவதிலும்விட விதப்பந்துகள் இலகுவானவை வினைத்திறனானவை எனும் விஞ்ஞான எண்ணக்கருவின் அடிப்படையில்.ஆண்டான்குளம், வெல்வேரி, விளாங்குளம் வனப் பகுதிகளில் மழைக் காலங்களில் விதைப் பந்து வீசும் தன்னலமற்ற பணியில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்பப்பிரிவு மாணவர்கள்.வேம்பு, நாவல், புளி, புங்கை உட்பட ஏறத்தாள சுமார் 1500 விதைப்பந்துகள் எமது மாணவர்களால் தயாரிக்கப்பட்டு வீசப்பட்டன.சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.விதைப்பந்து தொடர்பான அறிமுகத்தையும் ஊக்கத்தையும் வழங்கிய SEUSL விரிவுரையாளர் Dr. Riyaz ahamed அவர்களுக்கு எமது மேலான நன்றிகள்.